சொந்த வீட்டுக் கனவுகள் நனவாக திங்கட்கிழமை பௌர்ணமி அம்மன் வழிபாடு:
இந்த உலகில் மனிதராகப் பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான ஆசைகள் மற்றும் அபிலாஷைகள் இருக்கும். அவற்றுள் ஒன்றாக விளங்குவது சொந்த வீடு. இது எல்லாருக்கும் அமைந்து விடுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலருக்கு சொந்த வீடு இருக்கும். ஆனால் அதில் வசிக்க முடியாத சூழல் இருக்கலாம். ஒரு சிலருக்கு வீடு கட்ட ஆரம்பித்து ஏதாவது பிரச்சினை காரணமாக அது பாதியிலேயே நின்று போயிருக்கும். ஒரு சிலர் கடனுக்கு வீடு வாங்கி அதனை கட்ட முடியாத சூழ்நிலை காரணமாக அதில் இருக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வீடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வு காண, மேற்கொள்ள வேண்டிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சந்திரன் என்பது மனத்தைக் குறிக்கும். சந்திரனை மனோ காரகன் என்று கூறுவார்கள். சொந்த வீடு வேண்டும் என்ற நமது எண்ணம் செயல்பட வேண்டும் என்றால் சந்திரன் ஸ்தலம் அதற்கு உகந்தது. அத்தகைய ஸ்தலம் திருப்பதி ஆகும். அந்த ஸ்தலத்தில் இருக்கும் அலமேலு மங்கை தாயாரை பௌர்ணமி அன்று வழிபடுவதன் மூலம் நமது எண்ணம் நிறைவேறும். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் அலமேலு மங்கை தாயாரின் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள் சொந்த வீட்டு கனவு நனவாகும்.
கீழ் திருப்பதியில் இருக்கக் கூடிய அலமேலு மங்காபுரத்தில் வீற்றிருக்கும் அலமேலு மங்கை தாயார் கோவிலுக்கு திங்கட்கிழமை சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் பௌர்ணமியோடு சேர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று அலமேலு மங்கை தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்து, உங்களுடைய பிரார்த்தனையை வைத்தால் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அடுத்த பௌர்ணமி திதிக்குள் சரியாகும் என்பது நம்பிக்கை.
என்றாலும் நீங்கள் பௌர்ணமியும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பாக வீட்டிலேயே பௌர்ணமி நாளில் உங்கள் தாயாரது திருவுருவப்படம் இருந்தால், தாயாருக்கு உங்கள் கையாலேயே குங்கும அரசனை செய்து வாருங்கள் திங்கட்கிழமையோடு வரக்கூடிய பௌர்ணமி திதி அன்று அலமேலு மங்காபுரம் வந்து தாயாரை சந்திக்க கூடிய பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும், இந்த பாக்கியம் உங்களுக்கு விரைவில் கிடைக்கும். அந்த நாளில் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.